பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் ரூ.12 கோடி கேட்கிறாராம். படக்குழுவினர், அவர் கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்
நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
பொன்ராம் இயக்கத்தில்
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'