தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்பதை தாம் தவிர்க்கப்போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதிக்கு, அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டபோது, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் கன்னத்தில், நபர் ஒருவர் தாக்கும் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
பாடசாலை ஒன்றின் நிகழ்வில் பங்கேற்க சென்றபோது, பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அருகில் சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த நபர் ஒருவர் ஜனாதிபதி மெக்ரோனின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த இடத்தில், பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினர், ஜனாதிபதி மெக்ரோனை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அடங்கிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தனிப்பட்ட சம்பவம் என்றும், தாக்கிய நபர், விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர் அல்ல என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நக
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட
