விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.
தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவர் தனது நாய் குட்டியை தான் மகன் என குறிப்பிட்டுள்ளார். ‘தி லயன் கிங்’ படத்தில் முபாசா தனது குழந்தை சிம்பாவை அறிமுகப்படுத்துவது போலவே வரலட்சுமியும் அந்த வீடியோவில் தனது செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். இது தவிர அந்த நாய்க்குட்டிக்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி உள்ளார்.

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம
மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு த
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூ
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் ச
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ
