இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது வரை 3.8 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி 39 வயதான இளவரசி கேட் மிடில்டன், நேற்று லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் வைத்து முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
இந்த தகவலை அவர் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தடுப்பூசி செலுத்தும் பணியில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், 38 வயதான இளவரசர் வில்லியம், கடந்த வாரம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். மேலும் இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
