கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரனோ தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 500 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து பரிதவிக்கின்றனர். அந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்குமாறு பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச
தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள
உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா
