மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் அவர்கள் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. தூரம் சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், ‘‘சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மகாசுர்னே வரை 39.69 கி.மீ. தூரத்துக்கு தரமான கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது’’ என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் மந்திரி அசோக் சவான் சாதனை படைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார். இதேபோல மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை போடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
