கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது நான் சந்தித்தேன் என்பதை நிரூபியுங்கள்? என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அவரது கட்சி எம்.எல்.ஏ.வான நவ்ஜோத் சிங் சித்து சவால் விடுத்தார்.
பா.ஜ.க.வில் இருந்த நவ்ஜோத் சிங் சித்து கடந்த 2017ம் ஆண்டில் காங்கிரசுக் தாவினார். கடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மேலும் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டில் முதல்வர் அமரீந்தர் சிங் தனது அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்தார். அப்போது சித்து வசம் இருந்த உள்ளாட்சி மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறைக்கு வேறொருவருக்கு மாற்றி விட்டு அவருக்கு மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அமரீந்தர் சிங் ஒதுக்கினார்.
இதனால் கடுப்பான சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அது முதல் முதல்வர் அமரீந்தர் சிங்கை சித்து அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார். பதிலுக்கு அமரீந்தர் சிங்கும் சித்துவை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் அண்மையில், சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு தாவ போவதாக அமரீந்தர் சிங் தெரிவித்தார். ஆனால் சித்து அப்படி எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் வேறொரு கட்சி தலைவருடன் ஒரு முறையாவது சந்தித்தேன் என்று நிரூபியுங்கள் என்று முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு சித்து சவால் விடுத்தார்.
நவ்ஜோத் சிங் சித்து தனது டிவிட்டர் பக்கத்தில், மற்றொரு கட்சி தலைவருடன் நான் சந்தித்த ஒரு சந்திப்பை நிரூபியுங்கள்? நான இதுவரை யாரிடமும் எந்த பதவியையும் கேட்டதில்லை. நான் கேட்பது பஞ்சாபின் வளர்ச்சி மட்டுமே. நான் பலமுறை அழைக்கப்பட்டேன், அமைச்சரவையில் இடம் தருவதாக பலமுறை தெரிவித்தார்கள். ஆனால் நான் ஏற்கவில்லை. இப்போது எங்கள் மதிப்பிற்குரிய கட்சி மேலிடம் தலையிட்டுள்ளது. காத்திருப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.