More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு!
May 23
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு!

கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்தவாறு வெசாக் பண்டிகையை கொண்டாடும் பக்தர்களுக்காக பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை முன்னிறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு கடந்த (21) ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.



பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களினால் பிரதமருக்கு இந்த பத்திக் வெசாக் கூடு வழங்கி வைக்கப்பட்டது.



வீடுகளில் இருந்தவாறு வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் பக்தர்களுக்காக தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக வெசாக் அலங்கார நிர்மாணங்களை கண்டு களிப்பதற்கு வாய்ப்பளிப்பது பத்திக் வெசாக் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.



வெசாக் அலங்காரங்களை புதுமையான மற்றும் உள்ளூர் தோற்றத்திற்கு ஏற்ப தேசிய வடிவமைப்பு மையம் நிறைவுசெய்துள்ள இந்த படைப்பு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் எண்ணக்கருவாகும்.



தேசிய மூலப்பொருட்கள் மற்றும் கலாசார மரபுகளை மேம்படுத்தி பத்திக் வடிவமைப்புகளுக்கு ஒரு புதிய போக்கை உருவாக்குவதற்காக இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.



வீடுகளில் இருந்தவாறு வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் பௌத்த பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த படைப்பு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராட்டப்பட்டது.



குறித்த சந்தர்ப்பத்தில் பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய வடிவமைப்பு மையத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan11

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்

Mar20

நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்தà®

Feb06

அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொணà¯

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபà

Dec13

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களà¯

Oct01

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்à

Jul01

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கà

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Jan30

இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்கà

Jan25

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகà®

Jun07
Jun09

எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்

Jul14

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிà®

Oct22

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொணà

Mar07

பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் பà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:31 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:31 pm )
Testing centres