தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி, கோவையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் நாளை முதல் 1 வார காலத்துக்கு தளர்வுகளற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, நேற்றும், இன்றும் அனைத்தும் கடைகளும் திறக்கப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனையொட்டி, கோவை மாநகரில் நேற்று மாலை முதலே அனைத்து காய்கறி மார்கெட்டுகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை நடைபெற்றது. இதனால் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, காந்திபுரம், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மளிகை மற்றும் அத்தியாசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல், உக்கடம் ராமர்கோயில் வீதி மார்க்கெட் உள்பட பல்வேறு மார்கெட்டுகளில் காய்கறி வாங்க ஏளாமானோர் திரண்டதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமுடக்கத்தால் காய்கறி விலை பன்மடங்கு உயர்ந்தது. குறிப்பாக கிலோ 20-க்கு விற்பனையான வெங்காயம் ரூ.60 வரை விலை உயர்ந்தது. இதபோல் தக்காளி விலையும் ரூ.50-க்கு விற்பனையாகி வருகிறது. பீன்ஸ் கிலோ ரூ.100-க்கும், கேரட் கிலோ ரூ.40-க்கும், காளி பிளவர் ஒன்று ரூ.25-க்கும், தேங்காய் ஒன்று ரூ.25-க்கும் விற்பனையாகி வருகிறது.
இதேபோல், வெளி மாட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று மாலை முதல் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் .இதனையொட்டி, உக்கடம் கொரோனா தடுப்பு நடவடிகைகையாக 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, பொ