கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் முகாம்களில் சென்று போட்டுக்கொள்ளலாம்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி இருக்கிறது. தொற்று அதிகமாகி வருவதால் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
இதனால் தடுப்பூசி போட காத்திருக்க வேண்டி உள்ளது. இந்தநிலையில் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்து சிலருக்கு ஊசி போடுவதை பார்வையிட்டார்.
மாநகராட்சி மருத்துவ ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவார்கள். இந்த திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை மு அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள