More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு!
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு!
May 21
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு!

இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



இதனையடுத்து மீண்டும் 25ம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இதற்கு முன்னர் அமுல்ப்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.



இதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியும்.



நடமாட்ட கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.



இதேவேளை, நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதன்பின்னர் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும், பேலியகொடை மெனிங் சந்தை ஆகியனவற்றை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை மீண்டும் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் போது தேவையான மரக்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலங்கள், ஆளுநர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.



சகல மொத்த, சில்லறை வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun21

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர

Mar03

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி

Jul17

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த

Feb08

எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்

Feb24

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக

May19

இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Feb23

இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி

Apr08

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

Feb02

களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ

Mar14

இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்

Aug07

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி

Aug21

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க

Jan27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 01 (00:35 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 01 (00:35 am )
Testing centres