கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்து 17 ஆயிரத்து 397 ஆக உள்ளது.
ஒரே நாளில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,88,782 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 6,20,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், பார்கள், கடைகள், சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள், கலச்சாரம் மற்றும் விளையாட்டு மையங்கள் திறக்கலாம் என்றும், நாடு தழுவிய இரவு ஊரடங்கு உத்தரவு மாலை 7 மணிக்கு பதிலாக 9 மணி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதி
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப் இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி எ ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி
