மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இளைஞர் மதுராவில் ஆம்புலன்ஸ் ஓட்டிவருகிறார். 9 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் இவர். முதல் அலையின் போதும், இப்போதும் ஆம்புலன்ஸ் ஓட்டி மக்கள் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது தாயார் கடந்த 15-ந் தேதி மரணம் அடைந்தார். பிரபாத் இரவுப்பணியில் இருக்கும்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நோயாளிகள் பலரையும் மருத்துவமனை அழைத்து வர வேண்டும் என்பதால் அவர் பணியில் இருந்து பாதியிலேயே செல்லவில்லை.
இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன் பிறகே தனது கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் தாயின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார். கடந்த ஆண்டு ஜூலையில் பிரபாத்தின் தந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.
அப்போதும் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பிரபாத் பணிக்குத் திரும்பினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபாத்தின் இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம
கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில
லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச