சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெண், 2 குழந்தைகள் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ராமச்சந்திரபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஸ்கூட்டர் ஒன்று இருந்தது.
ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது.
கிஷோர்குமார், நீரஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நீரஜாவின் பெற்றோர் இறந்ததால், கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நீரஜாவிடம், தந்தை சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தொந்தரவு செய்தனர். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த நீரஜா, குழந்தைகளை குட்டையில் தள்ளி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப
அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
சென்னையில் அனைவருக்கும்
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ
