மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதம் ஆகிறது. இந்த தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் 6 மாதம் நிறைவடைந்ததையொட்டி, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தலாம் என தகவல் வெளியானது. குறிப்பாக டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி-அரியானா எல்லையான சிங்கு எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, விவசாயிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் விவசாய பெருமக்கள் தங்கள் வீடுகள், கடைகள், டிராக்டர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும்படி விவசாய சங்க தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டம் மற்றும் தர்ணா நடைபெறும் இடங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அரியானா முதல்வர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண
ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட
ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத