காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன.
18 முதல் 45 வயதினருக்கு செலுத்த 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 1.64 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.
கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிறகு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் à
ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்à
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த முà®
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசà®
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்à®
மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச
பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோà®
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனாà
கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம்
