தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி சென்னையில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் 200 இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் தணிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று தேவையின்றி வெளியேறியதாக ஆயிரத்து 110 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 969 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது முக கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை என்ற குற்றத்திற்காக 83 வழக்குகளும் , குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடைகளை திறந்து வைப்பதற்காக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி பலரும் பைக்குகளில் சுற்றித் திரிந்ததால் இன்றுமுதல் ட்ரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந
மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த
கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள