கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீசப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த காசோலைகள் இரு வேறு பகுதிகளில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. கிளிநொச்சி பளை காவற்துறை பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு சந்தி மற்றும், கிளிநொச்சி காவற்துறை பிரிவிற்குட்பட்ட மதுவரித்திணைக்கள அலுவலகத்தை அண்மித்த பகுதியிலும் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளன.
வீசப்பட்டுள்ள காசோலைகள் அரச மற்றம் தனியார் வங்கிகளினுடையது என்பதுடன், அவை பயன்படுத்தப்பட்டும் உள்ளன. ஏ9 வீதியில் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளமையானது கேள்விகளை எழுப்பியுள்ளது. பயன்படுத்தப்பட்ட காசோலைகள் எனினும் அது என்ன நோக்கத்திற்காக வீசப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட காசோலைகள் இவ்வாறு வீதியில் வீசப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவற்துறையினரும், காவற்துறை புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந
