தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது. இதனால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
தற்போது ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வரலாறு காணாத அளவுக்கு நோய் தொற்று பரவியுள்ளது. மக்களை காக்க அரசு அனைத்து கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுக்கு உதவி கரம் நீட்டுங்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.
முதல்வரின் கோரிக்கைக்கிணங்க பல தொழில் நிறுவனங்கள் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. அந்தவ கையில் நேற்று, நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வரைச் சந்தித்து ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கினார். அதே போல சன் டிவி குழுமம் ரூபாய்.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி நிதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்த பணத்தை கொடுப்பதாக அறக்கட்டளை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க
ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவ தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா