வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை தென்காசி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இதனிடையே எதிர்வரும் 14 ஆம் திகதி தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலைத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய தெற்கு அரபிக் கடல் மற்றும் மாலைத்தீவு பகுதிக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க
நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம்
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற் மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந
