ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே இ பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இரு தினங்களுக்கு முன் மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிக்கூடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி மாணவிகள் மரண ஓலம் விட்டனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த நகரையும் அதிர வைத்தது. முதல் கட்டமாக 25 மாணவிகள் பலியானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், குண்டு வெடிப்பில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்த கொடூர தாக்குதலையும் அவர்களே நடத்தி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத
இங்கிலாந்து
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுக பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தத
