இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.
அந்த வகையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து இந்தியா பெற்ற உதவிகளின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஏப்ரல் 27 முதல் மே 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 13,496 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 11,058 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 19 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், 7,365 வென்டிலேட்டர்கள் மற்றும் சுமார் 5.3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் உலகளாவிய உதவியாக பெறப்பட்டது.
குறிப்பாக மே 14 மற்றும் 15-ந்தேதிகளில் கஜகஸ்தான், ஜப்பான், சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 500 வென்டிலேட்டர்கள், 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 40 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் மற்றும் முககவசங்கள், கவச உடைகள் பெறப்பட்டன. உலகளாவிய உதவியாக பெறப்பட்ட இந்த வளங்கள் அனைத்தும் தரைவழியாகவும் விமானங்கள் மூலமாகவும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கடà
தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செà
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந
பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்களà
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட
மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்டà
கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இ
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்à®
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந
