அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக தலா 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். அப்படி இதுவரை பல்வேறு கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேலும் 52 செயற்கைக்கோள்களை பால்கான்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தியது. இந்த புதிய செயற்கைக்கோள்கள் அனைத்தும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட செயற்கை கோள்களுடன் இணைந்து செயல்பட உள்ளன. புவியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக à
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை à
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோனà
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகà®
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்
தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்à
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி
அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவà
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிà
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட
