More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
May 09
கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரையும் இந்த ஆண்டும் பரோலில் உடனடியாக விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.



இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரித்தது.



இதுதொடர்பான உத்தரவு நேற்று வெளியானது. அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-



கோர்ட்டுகளின் உத்தரவுப்படி ஏற்கனவே பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்



டெல்லி திகார் உள்ளிட்ட சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிடுவது போல, பிற மாநிலங்களும் அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.



சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளுக்கு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்தால் அவர்கள் வீடு சென்று சேர போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.



சிறையில் கொரோனா பரவலைத் தடுக்க அவ்வப்போது கைதிகளுக்கு மட்டுமின்றி, சிறை அதிகாரிகள், பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சிறை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்



பரோலில் செல்ல விரும்பாத கைதிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை சிறையில் செய்ய வேண்டும்.



இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விசாரணைக் கைதிகள், எந்த வகையிலான கைதிகளை நன்னடத்தை பரோல், இடைக்கால பரோல் ஆகியவற்றின் கீழ் விடுவிக்கலாம் என்பதை முடிவு செய்ய சட்டத்துறைச் செயலாளர், மாநில சட்ட உதவி ஆணையத்தின் தலைவர் ஆகியோர் அடங்கிய உயர் அதிகார குழுவை அமைக்க மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21
Mar22

மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை

Mar05

கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முà®

Nov08

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலà

Apr30

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரà®

Mar03

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட

Aug23

தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்à

Mar27

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை à®

Sep08

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி

Mar18

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும

Jun06

ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோகà

Mar03

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணà

Mar07

உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணà

Jan22

புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்

Apr12

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்லà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:55 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:55 am )
Testing centres