தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார். இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார்.
தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் ரவீனா ரவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகாவிற்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி
நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக
விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம
