பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக் ஜலசந்தி கடலில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சிறைபிடித்தனர். அவற்றில் 86 மீனவர்கள் இருந்தனர். இவர்களை நடுக்கடலிலேயே விசாரணை செய்த கடற்படையினர் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து, 86 மீனவர்களும் யாழ்ப்பாணம் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையினரிடம் நடுக்கடலிலேயே படகுகளுடன் ஒப்படைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்றிரவு 86 மீனவர்களும் ராமேஸ்வரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்தால் உடன் அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால் கொரோனா பீதி காரணமாக எச்சரித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகத்தில்
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை, விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி செ25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத
