இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு பல இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், கனடா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு சர்வதேச நாடுகள் எல்லைகளைக் கடந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து செயலாற்றுவது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் மோடி காணொலி மூலமாக உரையாடல் நடத்தினார். இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், 2030-ம் ஆண்டு வரை இந்தியா-பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்த தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ‘ரோட்மேப் -2030’ என்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என இரு நாட்டுப் பிரதமர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்த
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு
முதல்- அமைச்சர்
முதல்-அமைச்சர்
பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட் மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க