இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வருகிற விமானங்களுக்கு இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஏற்கனவே தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாக வருகிற அனைத்து வணிக விமான போக்குவரத்துக்கும் குவைத் நேற்று தடை போட்டுள்ளது.
இது குறித்து குவைத் சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “24-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் அனைத்து வணிக விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளோம். இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடு வழியாகவோ வரும் அனைத்து பயணிகளும் இந்தியாவுக்கு வெளியே குறைந்தது 14 நாட்கள் கழித்திருக்காவிட்டால் அவர்கள் குவைத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது” என கூறி உள்ளார்.
அதே நேரத்தில் குவைத் மக்கள், அவர்களின் குடும்ப உறவினர்கள், வீட்டு பணியாளர்கள் நாட்டில் நுழைய அனுமதி உண்டு. சரக்கு விமான சேவைகளும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள ந
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக
சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
