தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தலைமையிலான மந்திரிசபையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் மரியோ மியோனி (வயது 56).
இவர் நேற்று முன்தினம் அர்ஜென்டினாவின் மத்திய பகுதியில் உள்ள ரொசாரியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டசுடன் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைநகர் பியூனஸ் அயர்சின் ஜூனின் நகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.
சான் ஆண்டிரஸ் டி கில்ஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மந்திரி மரியோ மியோனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘நமது அரசாங்கத்தின் போக்குவரத்து மந்திரியான மரியோ மியோனியின் மரணம் குறித்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு முழுமையான, அயராத, நேர்மையான அரசியல்வாதியை நாம் இழந்துள்ளோம். அவர் ஒரு முன்மாதிரியான அதிகாரியாக இருந்தார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மந்திரியின் கார் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நா
நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
ஆப்கானிஸ்தானில்
கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என் உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக
