டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் டெல்லியில் மாத்திரம் 25 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.
அந்த அறிவிப்பில், “டெல்லி இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
புதிய பாதிப்பு இதே நிலையில் நீடித்தால், சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துவிடும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாகவே உள்ளன.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என அவர் மேலும் கூறினார்.
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள
கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள் நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந் திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
