More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா தொற்று - பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று ஆலோசனை!
கொரோனா தொற்று - பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று ஆலோசனை!
Apr 30
கொரோனா தொற்று - பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கும் நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் ஆஸ்பத்திரிகளும், பெருகி வரும் பிணங்களை எரிக்க முடியாமல் சுடுகாடுகளும் திணறி வருகின்றன. இதனால் வரலாறு காணாத துயரத்தை நாடு அனுபவித்து வருகிறது.



இந்த சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, கொரோனாவை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை மாநிலங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் அறிவித்து வருகிறார்.

 



இந்நிலையில் இன்று அவர் தனது மந்திரிகள் குழுவினருடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்துகிறார்.



இதில் கொரோனாவால் நாடு சந்தித்து வரும் மோசமான சூழல் மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.



நாட்டில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கியபின் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி நடத்தும் முதலாவது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.



இதற்கிடையே ராணுவ தளபதி நரவனேயுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு ராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் தயார் நிலைகள் குறித்து மோடி ஆய்வு செய்தார். அப்போது ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நரவனே பிரதமருக்கு விளக்கினார்.



அதன்படி நாடு முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தற்காலிக மருத்துவமனைகளை ராணுவம் அமைத்து வருவதாகவும், மக்கள் தங்கள் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை நாடலாம்,

மேலும் இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள், எடுத்துச் செல்லப்படும் வாகனங்களை கையாளுவதற்கு திறன்மிகுந்த வீரர்களை பயன்படுத்தி வருகிறோம் என பிரதமரிடம் நரவனே தெரிவித்ததாக ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத

Apr25

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ

Mar11

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்

Feb18

கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க

Sep19

தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் à

Feb24

 மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பà

Feb26

கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்à®

May21

தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பாà

May27

வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத

Oct06

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடà

Jul06

கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்à

Mar19
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (11:16 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (11:16 am )
Testing centres