ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சண்டையின்போது பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், பர்கினோ பசோவில் உள்ள ஷலீல் மாகாணம் யாடகூ கிராமத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாதுகாப்பு படை வரும் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அந்த கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கிராம மக்கள் பலர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் சà¯
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையிà®
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்à
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய à
ஏரோஃப்ளோட் விமானம்
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், à® துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகà உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்à வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன௠பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமாà®
