முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,
றிசாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினரான அவரை கைதுசெய்வதாக சபாநாயகருக்கு கூட அறிவித்தல் விடுக்கப்படவில்லை. அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.
சிறுபான்மை சமூகங்களிற்கு முன்னெடுக்கப்படும் அநீதிகளிற்கெதிராக வீதியில் இறங்கியே நாம் போராட வேண்டியுள்ளது. எனவே எமது தலைவரை விடுவிக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்காததற்கா இந்த கைது, சிறுபான்மை தலைமைகள் விடுதலைசெய், உண்மையான சூத்திரதாரிகளை கைதுசெய், அரசே பழிவாங்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
