More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு!
இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு!
Apr 27
இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402. ஜெர்மனியில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 40 ஆண்டுகள் பழமையானதாகும்.



இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இந்த கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கி கப்பல் இந்தோனேசியாவின் பாலித்தீவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.



அப்போது திடீரென கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர்.



இதனையடுத்து இந்தோனேசிய கடற்படை, நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அறிவித்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது.



கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 500-க்கும் அதிகமானோர் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



அதுமட்டுமின்றி நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவின.



இந்த சூழலில் 3 நாட்களாக இரவு பகலாக நடந்த மீட்பு பணிகளுக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை, மாயமான நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து, கப்பலின் பாகங்கள் சிலவற்றை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர்.



இதனையடுத்து மாயமான நீர்மூழ்கி கப்பல் மீட்க முடியாத ஆழத்தில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்தது. மேலும் கப்பலில் இருந்த மாலுமிகள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கடற்படை தெரிவித்தது. அதேசமயம் கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகள் தொடர்ந்தன.



இந்த நிலையில் ‌கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் 3 துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக இந்தோனேசிய ராணுவம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



இதுகுறித்து ராணுவ தலைமைத் தளபதி ஹாதி ஜஹ்ஜந்தோ பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-



மாயமான நங்காலா நீா்முழ்கிக் கப்பலின் செங்குத்து சுக்கான் அமைப்பு, நங்கூரங்கள் மற்றும் பிற முக்கிய பாகங்கள் அடங்கிய கடலடிப் படங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அந்தப் படங்களை ஆதாரமாகக் கொண்டு, நங்காலா நீா்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். மேலும் கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்து விட்டனர் என்பதை ஆழ்ந்த சோகத்துடன் தெரிவிக்கிறோம்.



இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக இந்தோனேசிய கடற்படை தளபதி யூடோ மார்கோனோ இது பற்றி கூறுகையில் ‘‘சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கேரமாக்கள் பொருத்தப்பட்ட அதிநவீன ஆழ்கடல் ரோபோ கருவி, 2,600 அடி ஆழத்தில் நங்காலா நீா்மூழ்கிக் கப்பல் 3 துண்டுகளாக உடைந்து கிடப்பதைக் கண்டறிந்தது’’ என்றார்.



அதே சமயம் நீர்மூழ்கி கப்பல் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை இரு தளபதிகளும் தெளிவுபடுத்தவில்லை.



இதனிடையே நீர்மூழ்கி கப்பல் விபத்தில் பலியான மாலுமிகள் அனைவரும் இந்தோனேசியாவின் சிறந்த தேசபக்தர்கள் என்று அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ புகழாரம் சூட்டினார்.



இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘இந்தோனேசியர்கள் அனைவரும் இந்த சம்பவம் குறித்து தங்கள் ஆழ்ந்த சோகத்தை தெரிவிக்கின்றனர். குறிப்பாக விபத்தில் பலியான மாலுமிளின் குடும்பங்களுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்’’ எனக் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி

Sep18

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந

Aug31

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு

Aug18

ஆப்கானிஸ்தானை 

 மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்

Sep30

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா

Jan26

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்

Mar25

உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற

Sep08

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி

May15

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக

Jun16

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க

Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

Mar01

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்

Mar16

சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (21:10 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (21:10 pm )
Testing centres