கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 600-க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் நேற்று அறிவித்துள்ளது. இவற்றில் வென்ட்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் வழங்கும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த மருத்துவ உபகரணங்கள் இங்கிலாந்தில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவை வரும் செவ்வாய்க்கிழமை காலை புதுடெல்லி வந்தடையும். அதன்பின், மற்ற உபகரணங்கள் வார இறுதிக்குள் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஆக்சிஜன் உபகரணம், வளிமண்டலத்தில் உள்ள காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்து இழுத்து நோயாளிகளுக்கு வழங்க வகை செய்யும். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையான மருத்துவமனைகள் அவற்றை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
இந்த உதவியானது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முக்கிய மருத்துவ சிகிச்சை வழங்க இந்திய அரசால் பயன்படுத்தப்படும். மத்திய அரசுடன் இணைந்து இங்கிலாந்து பணியாற்றி வருகிறது. இதனால் வரும் நாட்களில் கூடுதலாக என்ன உதவிகளை செய்ய முடியும் என்று அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்
ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என் தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித் கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன
