மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார்.
பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார். விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.
இந்தநிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து பூஜா ஹெக்டே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய
இந்திய சினிமாவே வி
நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் &lsq
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச
