பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று, பிரான்சில் 6 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரேசில் நாட்டுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரேசிலில் இருந்து பிரான்சுக்கு வரும் விமானங்கள் மற்றும் பிரான்சில் இருந்து பிரேசிலுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப
மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி
டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்க
ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 1
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்
