More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அரசைப் பிளவடைய இடமளியேன்:சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்! – மஹிந்த சூளுரை
அரசைப் பிளவடைய இடமளியேன்:சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்! – மஹிந்த சூளுரை
Apr 19
அரசைப் பிளவடைய இடமளியேன்:சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்! – மஹிந்த சூளுரை

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று எனது தலைமையில் நடைபெறவுள்ளது. அரசுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு இன்று முடிவு காணப்படும்.



மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட அரசைப் பிளவடைய இடமளியேன். அரசைக் கவிழ்க்கச் சிலரால் முன்னெடுக்கப்படும் சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்.என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.



ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-



ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி, ஒரு குடும்பமாக இயங்குகின்றது. குடும்பம் என்றால் அதற்குள் சில கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.



ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலத்தை அறியாமல் சிலர் செயற்படுகின்றனர். எமது கூட்டணி அரசை எவராலும் பிளவுபடுத்த முடியாது – என்றார்.  



அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம்அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டுக் கட்சிகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.



குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி ஒரு நிலைப்பாட்டையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டையும் கொண்டுள்ள காரணத்தால் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



அதேநேரத்தில், கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம், மே தினக் கூட்டம் என்பன குறித்தும் இன்று  இடம்பெறவுள்ள ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளன என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோபà

Oct24

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்கà®

Apr19

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்à

Mar30

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புà

Jul13

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவà

Mar28

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு

Sep26

மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடà®

Mar23

LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக  பயன்படுà®

Jan26

நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான

Oct05

வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்

May21

யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக à

Feb23

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாà®

Jun09
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:34 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:34 am )
Testing centres