இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் பாணியிலான ஆட்சியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அத்துடன் மக்களை வாழ வைக்கும் ஆட்சியே தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் எனவும் அவர் உறுதிப்படக் கூறினார்.
செல்லக்கதிர்காமம் – கரவிலே பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உலகத்துக்குப் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
நண்பர்களே எமக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் ஆட்சியல்ல. எமது நாட்டுக்குத் தேவை கொலை கலாசாரம் அல்ல.
நாம் தற்போது செய்ய வேண்டியது கொலைகளை அல்ல. மக்களை வாழ வைக்க வேண்டியதையே நாம் செய்ய வேண்டும்” – என்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையேற்படின் ஹிட்லராகவும் மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
மன்னார் க
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில