ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் இன்று இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு நாட்டு வெளிவிவகார அமைப்புகளின் தலைவர்களும், இருதரப்பு உறவுகளின் நடப்பு நிலை பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற உள்ள உயர்மட்ட அளவிலான கூட்டத்திற்கு தயாராவது பற்றியும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவையும் ஆலோசனையில் இடம்பெறுகிறது.
மேலும், மண்டல மற்றும் சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளை பற்றிய முக்கிய விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். ஐ.நா., பிரிக்ஸ் உள்பட சர்வதேச அரங்கில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறைகளைப் பற்றி ஆய்வு செய்யப்படும்.
இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நாட்டுக்கு லாவ்ரோவ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்கள
உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீர
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றி
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க
அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில
