அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6- தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மே 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் தற்போது பிரச்சாரம் முடிவை எட்ட உள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நேற்று மதிய வெயிலில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பா.ஜ.க.வின் அசாம் தொண்டர் ஒருவர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதை கவனித்த பிரதமர் மோடி உடனே பிரசாரத்தின் நடுவே ‘‘நமது தொண்டர் ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நமது அவசர உதவி மருத்துவ உதவிக்குழு எங்கிருந்தாலும் உடனே வந்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிரதமரின் இந்த செயல் கூட்டத்தில் கர ஒலி மற்றும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி
திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக்
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தா
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும்
தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
