அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதன்பின் காரில் இருந்து வெளியே குதித்த அதன் ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிகாரி ஒருவர் பலியானார். இதனால் கேபிடால் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிய வரவில்லை. அவரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறுகையில், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேபிடால் கட்டிடம் முடக்கப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. இதேபோல், கட்டிடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த வி
ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர
உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உ
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள
