தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மலாங் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவானது. கடலுக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் மலாங் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஜாவாவின் லுமாஜாங், மலாங் மாவட்டங்களில் 8 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்தனா். இரு மாவட்டங்களிலும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன
கடலுக்குக் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. எனினும் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கà
கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததà
உலகம் முழுவதும்
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனதà சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà® மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, à® விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத௠உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்à கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்கà சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவà® ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுடà¯
