ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது!
Apr09
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது!
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் அந்த இடத்திற்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு வீரருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.