More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!
கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!
Apr 07
கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!

கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என அறிவுறுத்தி உள்ளது.



இதற்கிடையே, பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசிக்க உள்ளார். கொரோனா 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.



20 ஆயிரமாக சரிந்திருந்த தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. இதனால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.



வைரஸ் பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே, கொரோனா பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடப்பதால் நாடு தழுவிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், இனி அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில், கொரோனா 2வது அலை தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது வி.கே.பால் கூறுகையில், ‘‘நாட்டில் தொற்று நோய் சூழல் மிக மோசமான கட்டத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு வேகமாக அதிகரிக்கிறது. முதல் அலையை காட்டிலும் கொரோனா 2வது அலையின் வேகம் மிக அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வழக்கம் போல் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.



2வது அலையை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். குறிப்பாக, அடுத்த 4 வாரங்கள் மிக மிக முக்கியமானது. இதில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்’’ என்றார். சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘‘சட்டீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உச்சகட்ட பாதிப்பு உள்ளது.



கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதாக 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், மாகாராஷ்டிராவில் 7 மாவட்டங்களும், கர்நாடகாவில் ஒன்று, டெல்லி ஒரு மாவட்டமாக கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது,’’ என்றார்.



50 உயர்மட்ட குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கரில் வைரஸ் பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பல்வேறு நிபுணர்களை கொண்ட உயர்மட்ட மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இக்குழுவினர் மகாராஷ்டிராவில் 30 மாவட்டத்திலும், சட்டீஸ்கரில் 11 மாவட்டத்திலும், பஞ்சாப்பில் 9 மாவட்டத்திலும் சென்று வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr22

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற

Jul06

கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்

Sep30

இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்

Jan27

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா

Aug03

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் த

Jul03
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (18:35 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (18:35 pm )
Testing centres