இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. 95 வயதான இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்ந்தனர். அங்கு ஆர்.நல்லகண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அம்மருத்துவமனை 'டீன்' டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது
கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சளி உள்ளிட்ட பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆர்.நல்லகண்ணு விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
மத்திய நிதி மந்திரி
இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு