More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!
மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!
Mar 30
மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!

மியான்மரில் விமானப் படை நடத்திய தாக்குதலை தொடா்ந்து கரேன் இன மக்கள் ஆயிரக்கணக்கானவா்கள் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.



மியான்மரில் கரேன் இன மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கக்கோரி கரேன் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஆயுதக்குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுவினா் அந்நாட்டு ராணுவ நிலை ஒன்றின் மீது சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றினா். மேலும் 10 ராணுவ அதிகாரிகளைக் கொன்று 8 வீரா்களை சிறைப்பிடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கரேன் மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. கரேன் தேசிய விடுதலை ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.



இதுதொடா்பாக கரேன் மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அளித்து வரும் ஃப்ரீ பா்மா ரேஞ்சா்ஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறுகையில், ‘கரேன் மாகாணம் முட்ரா மாவட்டத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு குண்டுகளை வீசி மும்முறை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை தொடா்ந்து கரேன் மாகாணத்தைச் சோ்ந்த சுமாா் 2,500 போ் சல்வீன் நதியைக் கடந்து வடக்கு தாய்லாந்தின் மே ஹாங் சோன் மாகாணத்துக்கு சென்றனா். இந்த மாகாணத்தில் இருந்து கிட்டதட்ட 10,000 போ் இடம்பெயா்ந்திருக்கலாம்’ என்று தெரிவித்தது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்றில், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய கரேன் இன மக்கள் பலா் உடைமைகளுடன் வனத்தில் ஓய்வெடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவா்களுடன் சிறாா்களும் இருப்பது காணொலியில் பதிவாகியுள்ளது.



கரேன் இனத்தவா்கள் தங்கள் நாட்டுக்குள் புகலிடம் தேடி வருவது தொடா்பாக தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா திங்கள்கிழமை கூறுகையில், ‘கரேன் இன மக்கள் தங்குவதற்காக சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவா்கள் மிக அதிக அளவில் இங்கு வர வேண்டாம் என்று கருதுகிறோம். அதேவேளையில் மனிதாபிமான அடிப்படையில் அவா்களின் வருகை குறித்து பரிசீலிக்கப்படும். அவா்களுக்காக அகதிகள் முகாம் அமைப்பது குறித்து தற்போது எதுவும் கூற விரும்பவில்லை’ என்றாா்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec28

பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் மà¯

May01

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவரà

Sep03

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பà®

Oct09

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங

Jul02

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்டà

Jun25

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பிà®

May02

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தà

Jan28

அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிà®

Mar22

உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்றà

Aug11

காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவத

Sep15

உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்திலà

Apr19

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரிà

Feb25

96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்à®

Apr07

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடினà

Mar08

ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:45 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:45 pm )
Testing centres