More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் போராடி மீட்பு!
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் போராடி மீட்பு!
Mar 29
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் போராடி மீட்பு!

ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது.



கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம் டன் பெட்டகங்களுடன் சென்ற ஜப்பானின் ‘எவர்கிவன்’ என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் சென்ற போது தரை தட்டி நின்றது. இந்த கப்பல் கால்வாய் முழுவதையும் அடைத்துக் கொள்ளும் வகையில் திரும்பி நின்றதால் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்கு வரத்து முழுமையாக தடைபட்டது.



உலகின் 15 சதவீத கப்பல் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது. இதனால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. கச்சா எண்ணை, கால்நடைகள் மற்றும் பல்வேறு சரக்குகளுடன் வந்த நூற்றுக்கணக்கான கப்பல்கள் சூயஸ் கால்வாயில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது.



இந்த கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதால் ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் செயற்கைகோள் மூலம் கப்பல் நிற்கும் இடம் தரை தட்டியவிதம் ஆகியவை துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. கப்பல் தரைதட்டி நின்ற கால்வாயின் ஆழமான பகுதியில் உள்ள மண் அகற்றும் பணி நடந்தது.



மீட்பு குழுவினர், அந்த கப்பலை சக்திவாய்ந்த இழுவை படகுகள் மூலம் திருப்பி மிதக்கவிடும் முயற்சியில் இறங்கினார்கள். 14 இழுவை படகுகள் மூலம் தரை தட்டிய கப்பலை இழுத்தனர். இதற்குகொஞ்சம் கொஞ்சமாக பலன் கிடைத்தது.



ஒருவார கால போராட்டத்துக்கு பிறகு தீவிர முயற்சி காரணமாக ‘எவர்கிவன்’ கப்பலின் தரை தட்டிய பாகம் அதிலிருந்து விடுபட்டது. இதனால் அந்த கப்பல் தரைதட்டிய இடத்தில் இருந்து மீண்டு மிதக்கத் தொடங்கியது.



சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவரான லெப் டினன்ட் ஜெனரல் ஒசாமா ரபே, ‘இன்று காலை இந்த கப்பல் மிதக்கத் தொடங்கியது’ என்று தெரிவித்தார். இதனால் ஒருவார போராட்டத்துக்கு பிறகு சூயஸ் கால்வாய் போக்குவரத்துக்கு வழிபிறந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட 

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உளà¯

Jun17

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாà

May14

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையà®

Jul17

இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவà

Feb28

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரà

May28

கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் à

Sep09

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை à

Mar03

 புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெணà

Jun09

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா

Sep19

ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நà

Feb04

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னà

Feb14

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெருமà

Aug01

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ

Sep18

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதைà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:45 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:45 pm )
Testing centres