வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார். நடுநிலை வகித்த நாடுகளின் வாக்குகளையும் இணைத்து கணக்குச் சூத்திரம் தயாரித்துள்ளார்.
அப்படியானால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. எனக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. 27 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச் சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே வெற்றி என தெரிவித்துள்ளார்
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
