கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள். ராணுவம் மீதும், போலீசார் மீதும் அவ்வப்போது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எதிராக அந்த நாட்டின் ராணுவமும் அவ்வப்போது சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு தெற்கு ஜாபுல் மாகாணத்தில் மிஷான் மற்றும் ஷின்காய் மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அந்த தகவல்களின் பேரில் அந்த நாட்டின் ராணுவம் நேற்றுமுன்தினம் இரவு அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களில் 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் ராணுவ வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இது மட்டுமின்றி தலீபான் பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதையும், வெடிமருந்துகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த இழப்புகள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு விழுந்த பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிà®
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடரà
உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவுà®
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயதà¯
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் à®
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
புடினின் ரகசிய காதலி என்று அறியப்படும் அலினா கபேவாவின
ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ரà
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலà
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் à®
